Advertisement

திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோற்ஸவம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை பிரமோற்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். ஏப்.,19 மாலை பூர்வாங்கப்பணிகள் துவங்கின. நேற்று காலை 7:20 மணிக்கு பெருமாள் திருக்கல்யாணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 9:40 மணிக்கு பலிபீடத்திற்கு பூஜையும், பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, கொடிமரத்தில் தர்பைப்புல் சார்த்தி கொடியேற்றம் நடந்தது. இரவில் காப்புக்கட்டப்பட்டு உற்ஸவம் துவங்கியது. தினசரி இரவில் வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடைபெறும். ஏப்.25ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், ஏப்.,.26ல் மாலை பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம், தங்கப்பல்லக்கில் பவனி, ஏப்.,29 காலையில் திருத்தேருக்கு பெருமாள் தேவியருடன் எழுந்தருளலும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும்.

Advertisement
 
Advertisement