Advertisement

பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு குடுமனை பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோத்தகிரி கட்டபெட்டு குடுமனை பட்டத்தரசியம்மன் திருக்கோவில் புதுப்பிப்பு பணி நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிமுதல் திருவிளக்கு, புனிதநீர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பிள்ளையார், பஞ்சபூதம், முளைப்பாரி வழிபாடு நடத்தப்பட்டது. இதனை அடுத்து, அம்மனுக்கு, முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிமுதல் திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை முழங்க திருக்கோவில் புனிதமாக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வியை தொடர்ந்து, கோவில் பூசாரி மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், மங்கள இசை முழங்க, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர், கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தினர்.

Advertisement
 
Advertisement