Advertisement

ஒன்பது ஆண்டுகளுக்கு பின் பல்லக்கு திருவிழா: 33 கிராம மக்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே, ஒன்பது ஆண்டுகளுக்கு பின், 33 கிராம மக்கள் நடத்திய, தேவி உத்தம கரக சாட்சி அம்மன், பச்ச கரக பல்லக்கு உற்சவத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, செம்பரசனபள்ளி, மயிலேபள்ளி, பெத்த சிகரப்பள்ளி, சிம் பாலக்காடி, கொட்டாயூர் உள்ளிட்ட, 33 கிராம மக்கள் ஒன்றிணைந்து, ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேவி உத்தம கரக சாட்சி அம்மன், பச்ச கரக பூப்பல்லக்கு திருவிழாவை நடத்துவது வழக்கம். இந்த விழாவை நேற்று, மக்கள் கோலாகலமாக நடத்தினர். இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்தல், ஏழு சுவாமிகளின் கலச ஆட்டம், வாணவேடிக்கை, தேரோட்டம் ஆகியவை நடந்தன. ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நடந்த, திருவிழாவைக் காண, சூளகிரி உட்பட்ட, ஐந்து பஞ்சாயத்துகளை சேர்ந்த, 33 கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் மது உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement