Advertisement

ராமநாதபுரம் அருகே புது மடம் கிராமத்தில் 300 ஆண்டு பழமையான மடம் அழிகிறது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புது மடம் கிராமத்தின் பெயர் காரணமாக விளங்கும் கிழவன் சேதுபதி காலத்து 300 ஆண்டு பழமையான மடம் அழிந்து வருகிறது. இதனை மீட்டு பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க வேண்டும், என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்
கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம் புது மடத்தில் பழமையான மடம் இருந்ததாக அப்பகுதியை சேர்ந்த எ.சீ.மோன் ஜெனிபர் ராமநாதபுரம் தொல்லியல் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே. ராஜகுரு, செயலாளர் சோ. ஞானகாளிமுத்து, ஆய் வாளர் ஹரிகோபால கிருஷ்ணன் மடத்தை ஆய்வு செய்தனர்.

வே. ராஜகுரு தெரிவித்ததாவது:

புனித யாத்திரை வருபவர்கள் கடலில் நீராடி முன்னோர்களை வணங்குவதை புண்ணியமாக கருதுகின்றனர். தனுஷ்கோடி, சேதுக்கரை, ராமேஸ்வரம், தேவிபட்டினத்தில் நீராடுவது வழக் கம்.

சேதுபதி கால மடம்: சேதுபதிகள் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ராமேஸ் வரம் வரும் பக்தர்கள் உணவு, குடிநீர், தங்குவதற்காக 5 மைல்களுக்கு ஒரு இடத்தில் மடம், சத்திரம் கட்டுவது வழக்கம். தனி நபர்கள் மன்னர்களிடம் மானியம் பெற்று நடத்தி யுள்ளனர்.

அப்படி கட்டப்பட்டதே இந்த பழமையான மடமாகும். 300 ஆண்டுகளுக்கு முன்பு கிழவன் சேதுபதி காலமான கி.பி. 1710ல் கட்டப்பட்டதாகும். இந்த மடத்துக்காக புது மடம் கிராமத்தை தானமாக வழங்கியுள்ளார். புதியதாக கட்டப்பட்டதால், புது மடம் என பெயர் பெற்றுள்ளது.

அமைப்பு: நீளம் 200 அடி, அகலம் 100 அடி, உயரம் 10 அடி அளவில் உள்ளது. மடத்தில் தாழ் வாரம் கோயில், தங்குமிடம், உள்முற்றம் உள்ளன. நுழைவு வாயிலில் கஜலட்சுமியின் சிற்பங்கள் உள்ளன.சிற்பங்கள்: மடத்தில் உள்ள தூணில் கை கூப்பி வணங்கிய நிலையில்
புடைப்பு சிற்பம் உள்ளது. இது கிழவன் சேதுபதியின் சிற்பமாக இருக்கலாம். புல்லாங்குழல் ஊதும் கண்ணன், மயில், லிங்கம், ஆமை, மீன் போன்ற சிற்பங்கள் உள்ளன. அனுமன் சிற்பமும் உள்ளது. தாழ்வாரத்தில் உள்ள தூணில் 3 அடி நீளத்தில் மீன் சிற்பம் உள்ளது.

அழியும் நிலை: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இம்மடத்தில் பள்ளிகூடம் இருந்து உள்ளது. தற்போது பயன் பாட்டில் இல்லாததால், கட்டடத்தில் மேல் பகுதியில் மரங்கள் வளர்ந்து உள்ளன. மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாற்றியுள்ளனர். இந்த ஊரின் பெயருக்கும்,
சேதுபதிகள் காலத்திற்கும் சான்றாக விளங்கும் இம்மண்டபத்தை மீட்டு பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க அரசு முன் வர வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Advertisement