Advertisement

நடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா

ப.வேலூர்: நன்செய் இடையாரில், சிவகாமி அம்பிகை உடனுறை நடராஜர் மற்றும் நால்வர் ஐம்பொன் உற்சவர் சிலைகளுக்கு பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாரில் உள்ள சுந்தரவள்ளி தாயார், சுயம்பு திருவேலீஸ்வரர் கோவிலில், சிவகாமி அம்பிகை உடனுறை நடராஜர், சண்டிகேஸ்வரர் மற்றும் நால்வர் பெருமக்களின் ஐம்பொன் உற்சவ சிலைகள் புதிதாக செய்யப்பட்டு, பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பக்தர்கள், காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். காலை, 10:00 மணிக்கு மேல் யாகசாலை முன் அமைக்கப்பட்டிருந்த, ஐம்பொன் உற்சவர் சிலைகளுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம்; தொடர்ந்து, சிவகாமி அம்பிகை, நடராஜ மூர்த்திக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், சிவகாமி அம்பிகை உடனுறை நடராஜர், சண்டிகேஸ்வரர் மற்றும் நால்வர் பெருமக்களின் வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement