Advertisement

கரூர் பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாடுகள் மாலை தாண்டும் விழா

கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், மாடுகள் மாலை தாண்டும் விழா நடந்தது. முதல் நிகழ்ச்சியாக காப்பு காட்டுதல் நிகழ்ச்சி, இரண்டாம் நாள் கரகம் பாலித்தல், பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. முள்ளிப்பாடி மந்தை, கோப்பாநாயக்கர் மந்தை, பிட்டம நாயக்கர் மந்தை, சின்னக்காட்டு நாயக்கர் மந்தை, ராஜகோடங் கி உள்பட, 14 மந்தை மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஜெயமங்கலம் மாடு முதலில் வந்தது. அந்த மாட்டிற்கு, முன்னாள் பஞ்., தலைவர் முருகேசன் ரொக்க பரிசு வழங்கினார்.

Advertisement
 
Advertisement