Advertisement

வீரட்டானேஸ்வரர் கோவில் தேர்ப் பணி முடிவதில் இழுபறி

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அம்மன் தேர் பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை நடடிக்கை எடுக்க வேண்டும். திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அம்மன் ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் திருத்தேராட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் அம்மன் தேரோட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் கோரிக்கையையேற்று, அறநிலையத் துறை சார்பில் அம்மன் திருத்தேர் செய்திட 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் கடந்த 2016ல் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் திருவதிகை ரங்காச்சாரி ஒப்பந்த பணிகளை எடுத்திருந்தார். பணிக்காலம் ஒர் ஆண்டு முடிந்தும் இன்னும் பாதி கூட முடியாமல் உள்ளது. வரும் 4ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு கொடியேற்றமும், வரும் 12ம் தேதி அம்மன் திருத்தேேராட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டாவது திருத்தேர் பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 
Advertisement