Advertisement

கோவை தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு

கோவை; ஆடிஸ் வீதியிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேற்று பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஆடிஸ் வீதியிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா கடந்த பத்து நாட்களுக்கு முன் துவங்கியது. திருக்கால அபிஷேகம், குருதட்சிணாமூர்த்திக்கு மூல மந்திர குரு ஹோமம், திருவிளக்கு வழிபாடு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சுர்சனஹோமம், 108 சங்காபிஷேகம், லலிதா சகஸ்ர நாம பாராயணம், முருகனுக்கு ஸ்கந்த ஹோமம் தொடர்ந்து, நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.காலை 7:00 மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வில் பக்தர்கள், பால்குடம் எடுத்து வீதிகளில் பக்திமயத்துடன் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் தண்டு மாரியம்மன் கோவிலில் துவங்கி, சோமசுந்தரா மில் ரோடு, காளீஸ்வரா மில் ரோடு, கிரே டவுன் வழியாக கோவிலை வந்தடைந்தது.

Advertisement
 
Advertisement