Advertisement

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வழி விளம்பர பதாகை அமைப்பு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு தினமும் வருகின்றனர். பல ஊர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், தடுமாற்றம் இன்றி திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு எளிதில் வர, பிரதான சாலைகளில், வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றம் சாலை, செங்கல்பட்டு சாலை, ஈ.சி.ஆர்., நெம்மேலி சாலை, ஓ.எம்.ஆர்., சாலைகளில், கோவில் செல்ல, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி மற்றும் முதல் ஆதீனமான, சிதம்பர சுவாமிகள் படத்துடன், கோவில் நிர்வாகத்தினர், வழிகாட்டி பதாகை வைத்துள்ளனர்.

Advertisement
 
Advertisement