Advertisement

கவனேஸ்வரருக்கு பாலாலயம்: கோவில் திருப்பணி தொடக்கம்

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி தொடங்கியது. சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், கும்பாபி ?ஷக விழா நடத்த, இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்தது. ஆனால், கோவிலில் பல்வேறு இடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால், அதை சரிசெய்து, கும்பாபி ?ஷகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 63 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. அரசு, 53.55 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. அதில், மூலவர் சன்னதி, அம்பாள் சன்னதி, விநாயகர், முருகன் சன்னதி உள்பட, ஒன்பது இடங்களில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதை முன்னிட்டு, நேற்று, பாலாலயம் நடந்தது. அப்போது, பால், தயிர், இளநீர், நெய் உள்ளிட்ட, 108 திரவியங்களால், சுவாமிக்கு அபி ?ஷகம், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, முருகன், விநாயகர், காலபைரவர், சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களை, அட்டையில் படமாக வரைந்தனர். அதை, கோவில் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். முன்னதாக, சம்பந்தப்பட்ட சுவாமிகள், துணி மூலம் மூடிவைக்கப்பட்டது. இனி, திருப்பணி முடியும் வரை, மண்டபத்தில், சுவாமிகளுக்கு பூஜை நடக்கும். தொடர்ந்து, சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் சன்னதியில், திருப்பணி மேற்கொள்ளும்போது, அங்கு பாலாலயம் செய்யப்படும். இப்பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement
 
Advertisement