Advertisement

திருப்பதி கோவிலில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்

திருப்பதி: திருமலை திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவிலில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவமாகும். முதல் பிரம்மோற்சவம் வருகின்ற 13ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 21ந் தேதி சக்ர ஸ்நானத்துடன் நிறைவடைகிறது. இரண்டாவது பிரம்மோற்சவம் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. 13ந்தேதி கொடியேற்றத்திற்கு தேவைான புனிதமான தர்ப்பைகளை வனத்துறையினர் கோவில் நிர்வாகத்திடம் கொண்டு போய்சேர்த்தனர்.

முதல் பிரம்மோற்சவ விழா விவரம்:

13/09/2018 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றம் இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனம்
14/09/2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பெரிய சேஷ வாகனம் இரவு 9 மணிக்கு ஹம்ச வாகனம்
15/09/2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு சிம்ம வாகனம் இரவு 9 மணிக்கு முத்துபல்லக்கு வாகனம்
16/09/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கற்பகவிருட்ச வாகனம் இரவு 9 மணிக்கு சர்வபூபாள வாகனம்
17/09/2018 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு மோகினி அவதாரம் இரவு 7:30 மணிக்கு கருட சேவை
18/09/2018 செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு ஹனுமந்த வாகனம் மாலை 5 மணிக்கு தங்கதேரோட்டம் இரவு 9 மணிக்கு கஜவாகனம்
19/09/2018 புதன்கிழமை காலை 9 மணிக்கு சூர்ய பிரபை வாகனம் இரவு 9 மணிக்கு சந்திர பிரபை வாகனம்
20/09/2018 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம் இரவு 9 மணிக்கு அஷ்வ வாகனம்
21/09/2018 வெள்ளிக்கிழமை காலை 6 மணிககு சக்ரஸ்நானம் மாலை 5 மணிக்கு கொடியிறக்கம்

திருமலைக்கோவிலில் மூலவர் சீனிவாசப்பெருமாள் என்றால் உற்சவர் மலையப்பசுவாமி. மலையப்பசுவாமி தான் தினமும் தேவியருடன் விதவிதமான வாகனங்களில் மலைக்கோவிலின் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திங்கள் கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மூலவர் அணிந்திருக்கும் மகாலட்சுமி ஆரம் மற்றும் மரகத பதக்கம் காசு மாலை உள் ளீட்ட ஆபரணங்களை அணிந்து அவருக்கு பிடித்தமான கருட வாகனத்தில் உலா வருவதால் மூலவரே எழுந்தருளி அருள்பாலிக்க வருவதாக நம்பிக்கை. அன்றைய தினம் மட்டும் பல லட்சம் பக்தர்கள் திரள்வர். அதே போல திங்கள் கிழமை மோகினி அவதாரத்தின் போது ஸ்ரீ வில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து அவரது கிளியையும் கைகளில் ஏந்திவலம் வருவது சிறப்பு இதற்கான மாலையையம் கிளியையும் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கொண்டு சென்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைப்பர்.

Advertisement
 
Advertisement