Advertisement

பிள்ளையார்பட்டியில் இன்று (செப்., 12ல்) மாலை தேரோட்டம்

திருப்புத்தூர்:பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மாலை தேரோட்ட மும், சந்தனக்காப்பில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தலும் நடைபெறும்.

இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும், நேற்று (செப்., 11ல்) வரை காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.

ஆறாம் நாளை முன்னிட்டு கஜமுகா சூரசம்ஹாரம் நடந்தது. இன்று காலை 9:00 மணியளவில் சுவாமி தேர் எழுந்தருளி, வடம் பிடித்தல் நடைபெறும். பின்னர் மாலை 4:00 மணிக்கு விநாய கருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேலும் அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலிப்பார்.

நாளை (செப்., 13ல்) விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் முக்குருணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் சுவாமிகள் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடைகிறது.

Advertisement
 
Advertisement