Advertisement

நவராத்திரி விழா: மீனாட்சி அம்மன் கோயில் அபிஷேகம், திரை போடும் நேரம் மாற்றம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா இன்று (அக்.,10) துவங்கி அக்.,18 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், திரை போடும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதிகாலை 4:30 - 5:00 மணி வரை பள்ளியெழுச்சி, 5:00 - 7:00 மணி வரை தரிசனம், காலை 7:00 - 8:00 மணி திரை போடப்படும், 8:00 - 10:00 மணி வரை தரிசனம், 10:00 - 10:45 மணி வரை திரை போடப்படும். காலை 10:45 -மதியம் 12:45 மணி வரை தரிசனம், 1:00 - மாலை 4:00 மணி வரை நடை அடைக்கப்படும்.மாலை 4:00 - 5:30 மணி வரை தரிசனம், 5:30 - இரவு 7:30 மணி வரை திரை போடப்படும். அந்த 2:00 மணி நேரத்தில் உற்ஸவரை தரிசிக்கலாம். இரவு 7:30 - 10:00 மணி வரை தரிசனம் செய்யலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement