Advertisement

பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணன்

ஏதுமற்ற ஒன்றிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. எத்தோற்றத்திற்கும் ஒரு (முன்) இருப்பு இருந்ததாலயே தோற்றம் நிகழ்ந்தது. நாம் குறிப்பிடும் முக்கிய கோள்கள். மில்க்கிவே, கேலக்ஸி அனைத்தும் உருவாகும் முன் காணமுடியாத அணுப்பிரமாணமாக இருந்தது என்கிறது வேதம். இறைவனின் சித்தத்தால் அணுக்கள் அத்தனையும் உயிர்பெற்று பிராணசக்தியினை வெளிப்படுத்தத் துவங்கியது. அணுச்சலனமும், அணுக்கூட்டச் சேர்க்கையால், பிரபஞ்சத்தில் வெட்டவெளியில் திடப்பொருட்களும், அத்திடப் பொருட்களின் திரட்சியின் காரணமாக வெடிப்புகளும், அவ்வெடிப்பின் பிரிவுகளே கோள்கள் எனவும், அவ்வெடிப்பின்போது ஏற்பட்ட ஒளி, வெப்பம், தொடர் சலனம், ஈர்ப்பு போன்ற பல நிகழ்வுகளை அதனுள்ளிருந்து, நிகழ்வுறச்செய்ததும் என அனைத்துமாய் இருப்பது பிராணனே.

Advertisement
 
Advertisement