Advertisement

பட்டிவீரன்பட்டி 10 கிராம முத்தாலம்மன் கோயில் திருவிழா

பட்டிவீரன்பட்டி:அய்யம்பாளையம், சித்தரேவு உள்ளிட்ட 10 கிராம முத்தாலம்மன் கோயில் திருவிழா நேற்று (அக்., 12ல்) நடந்தது.அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பட்டிவீரன்பட்டி,
சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 10 கிராம முத்தாலம்மன் கோயில் திருவிழா 15 நாட்களுக்கு முன் சாமி சாட்டுதலுடன் துவங்கியது.

பக்தர்கள் விரதம் இருந்தனர்.அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதியினருக்கு தேவரப்பன் பட்டியிலும், சித்தரேவு, நெல்லூர் பகுதிக்கு குப்பிநாயக்கன்பட்டியில் சாமி சிலைகள் செய்யப் பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அனைத்து கிராமங்களிலும் தீச்சட்டி, பால்குடம், கிடாவெட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் விளையாட்டு நடந்தது. நேற்று (அக்., 12ல்) அம்மன் சர்வ அலங்காரத்தில் பூஞ்சோலை சென்றடைந்தார்.

Advertisement
 
Advertisement