Advertisement

சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் அரக்காசு அம்மா தர்காவில் கந்தூரி விழா

சாயல்குடி:சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரக்காசு அம்மா தர்காவில் கந்தூரி விழா நடந்தது.அக்.3ல் கொடியேற்றம் நடந்தது. உலக நன்மைக்காக மவுலீது எஸ்.முகம்மது இப்ராகீம் ஓதினார். நேற்று (அக்., 12ல்)காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நேர்த்திகடன்களாக ஆட்டுக்கிடா, சேவல்கள் பலிபீடத்தில் பலியிடப் பட்டது.

அரக்காசு அம்மா தர்காவின் மக்பராவில் புனித சந்தனம் பூசி, பிறைவடிவ பச்சைப்போர்வை போர்த்தப்பட்டு, மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டது.மாலை 5:00 மணி முதல் இரவு
11:00 மணி வரை 8 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பிள்ளையார்குளம் விழா கமிட்டியாளர்கள் ராமகிருஷ்ணன், போஸ், கே.ராமர், முருகேசன் ஆகியோர் கூறியதாவது; சாயல்குடியை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான இந்துக்களும், முஸ்லிம்களும் தர்கா வழிபாட்டில் பங்குகொள்கின்றனர்.

புரட்டாசி வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் மதநல்லிணக்க விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக
எங்கள் ஊர் விளங்கிவருவது பெருமையாக உள்ளது, என்றனர்

Advertisement
 
Advertisement