Advertisement

ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் யாத்திரை பக்தர்களுக்கு காப்பீட்டு தொகை உயர்வு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச விபத்து காப்பீட்டு தொகையை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த,
கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும், 5 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் மற்றும் 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் இலவச விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோவில் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், வாரியத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் கவர்னருமான, சத்யபால் மாலிக் பங்கேற்றார்.மூன்று லட்சம் ரூபாய் இலவச விபத்து காப்பீட்டு தொகையை, 5 லட்சமாக உயர்த்தவும், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும், 1 லட்சம் ரூபாய் இலவச காப்பீட்டை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.மேலும், ரோப்கார் வசதியை பயன்படுத்தும் பக்தர்களுக்கு, கூடுதலாக, 5 லட்சம் ரூபாய்க்கான இலவச ஆயுள்
காப்பீடு வழங்கவும், இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement
 
Advertisement