Advertisement

சீரடிக்கு எப்படிச் செல்வது?

சீரடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இரயில் நிலையம் வந்தது. சீரடி சாய் நகர் இரயில் நிலையம் என்று அதற்குப் பெயர், இங்கு முழுமையாக எல்லா இரயில்களும் வர ஆரம்பிக்கவில்லை. கோபர்காவ் இரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமாகவோ அல்லது ஷேர் ஆட்டோக்கள் மூலம் சீரடிக்கு வர வேண்டும் கோபர்காவ் இரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் சீரடி உள்ளது.

சென்னையிலிருந்து சீரடி செல்ல விரும்புவர்கள் சென்னை -மும்பை செல்லும் இரயிலில் ஏறி டோண்ட என்ற இடத்தில் இறங்கியோ அல்லது புனே இரயில் நிலையத்தில் இறங்கியோ சீரடிக்கு பேருந்துகள் மூலம் செல்லலாம். டோண்ட் இரயில் நிலையத்தில் பேருந்துகள் அதிகம் வராது. எனவே புனே இரயில் நிலையத்தில் இறங்கி அங்குள்ள சிவாஜி மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்துகள் மூலம் சீரடியை அடையலாம். அடிக்கடி அரசுப் பேருந்துகளும் தனியார் சொகுசுப் பேருந்துகளும் சீரடிக்குப் இயக்கப்படுகின்றன. பயண நேரம் 5 மணி நேரம்.

சீரடியில் சமாதி மந்திர் வளாகத்தில் இரயில்வே முன்பதிவு நிலையம், அரசுப் பேருந்து முன் பதிவு நிலையங்கள் செயல்படுகின்றன. சீரடியிலிருந்து மும்பை, புனே, செகந்திராபாத், ஹுப்ளி பெல்காம், பங்களுரு, போன்ற ஊர்களுக்கு தனியார் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறப்படும்முன் இரயில் நேரங்களை மீண்டும் ஒருமுறை தொலைபேசி மூலம் இரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள். இவை மாற்றத்திற்கு உட்பட்டவை.

Advertisement
 
Advertisement