Advertisement

பழநி வின்ச் தண்டவாள பாதை புதுப்பிப்பு

பழநி: பழநி முரு­கன் கோயில் வின்ச்’ (மின்­இ­ழுவை ரயில்) தண்­ட­வா­ளப்­பா­தை­யில், சிமென்ட் சிலீப்­பர்­க­ளுக்கு இணை­யாக படிக்­கட்­டு­களை உயர்த்தி, புதுப்­பிக்­கும் பணி நடக்­கிறது. பழநி முரு­கன் கோயில் மலைக்கு எட்டு நிமி­டங்­களில் செல்­லும் வகை­யில் நாள்­தோ­றும் மூன்று வின்ச்’கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. இதன் தண்­ட­வா­ளப் பாதை­யில் மரக்­கட்­டை­க­ளுக்கு பதி­லாக, சிமென்ட் சிலீப்­பர்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளது. அதன் உய­ரத்­திற்கு ஏற்­ற­வாறு படிக்­கட்­டு­களை உயர்த்தி, புதுப்­பிக்­கும் பணி நடக்­கிறது. அதன்­பின் படிக்­கட்டு உய­ரத்­திற்கு ஜல்­லிக்­கற்­களை கொட்டி சிமென்ட் சிலீப்­பர்­களை பலப்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக கோயில் அதி­கா­ரி­கள்
தெரி­வித்­த­னர்.

Advertisement
 
Advertisement