Advertisement

திருநாவலுார் நம்பியாரூரன் கோவிலில் அமாவாசையில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி

உளுந்துார்பேட்டை: திரு­நா­வ­லுா­ரில் நம்­பி­யா­ரூ­ரன் கோயி­லில் நவ.,7 அமா­வா­சை­யன்று கும்­பா­பி­ஷேம் நடத்­து­வற்­கான பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வரு­வது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விழுப்­பு­ரம் மாவட்­டம், உளுந்­துா­ர்­பேட்டை அடுத்த திரு­நா­வ­லுா­ரில் நம்­பி­யா­ரூ­ரன் (சுந்­த­ர­மூர்த்தி நாய­னார்) மடம் உள்­ளது. இது அவர் பிறந்த இடம். உள்­ளூர் அர்ச்­சர்­கள் குடும்­பத்­தி­ன­ரால் பரம்­ப­ரரை பரம்­ப­ரை­யாக தனி­ம­ட­மாக நிர்­வா­கம் செய்­யப்­ப­டு­கிறது. பல ஆண்­டு­கள் பழமை வாய்ந்த இந்த மடம், காலப்­போக்­கில் சிதி­ல­ம­டைந்து, கேட்­பா­ரற்று கிடந்­தது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன் ‘தம்­பி­ரான் தோழர் அறக்­கட்­டளை’ என்ற பெய­ரில் மடத்தை கோயி­லாக கட்­டித் தரு­கி­றோம் என கேட்­டுக் கொண்­ட­தின் பேரில், பரம்­பரை அறங்­கா­ல­வர்­கள், தம்­பி­ரான் தோழர் அறக்­கட்­ட­ளைக்கு அனு­மதி வழங்­கி­னர். அற­நி­லை­யத்­து­றை­யும் 4.5 லட்­சம் ரூபாய்க்கு திருப்­பணி செய்து கொள்­ள­லாம் என அனு­மதி வழங்­கி­யது. ஆனால் பழைய மடத்தை இடித்து விட்டு கருங்­கல் கோயில் அமைத்து கும்­பா­பி­ஷே­கத்­தற்­கான ஏற்­பா­டு­களை
தம்­பி­ரான் தோழர் அறக்­கட்­ட­ளை­யி­னர் செய்­கின்­ற­னர். நவ.,7 ம் தேதி கும்­பா­பி­ஷே­கம் நடப்­பதை கேள்­விப்­பட்டு உள்­ளூர் குருக்­களும், பரம்­பரை அறங்­கா­வ­லர்­க­ளு­மா­கிய அர்ச்­சர்­கள், ‘நாங்­கள் கும்­பா­பி­ஷே­கம் செய்­கி­றோம்,’ என கேட்ட போது, அவர்­கள் மறுத்து தமிழ் முறைப்­படி கும்­பா­பி­ஷே­கம் செய்­வ­தாக அறி­வித்­துள்­ள­னர்.

சுந்­த­ரர் கோயி­லில் ஆகம மர­பு­படி செய்­யா­மல், தமிழ்­மு­றைப்­படி செய்­வது தவறு என அவர்­கள் மறுத்­தி­ருக்­கி­றார்­கள். மேலும் ‘கூடாத நாள்’ என்று ஜோதிட சாஸ்­தி­ரங்­கள் கூறி­யுள்ள அமா­வா­சை­யன்று கும்­பா­பி­ஷே­கம் செய்­வ­தாக அறி­வித்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் அனைத்து இந்­திய ஆதி­சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் சேவா சங்­கம் நீதி­மன்­றத்­தில் தடை­யாணை பெற முயற்­சித்­தது. ஆனால் மடத்­திற்கு கும்­பா­பி­ஷே­கம் செய்­கி­றோம் என அவர்­கள் அனு­மதி பெற்­று­விட்­ட­தால், தடை­யாணை கிடைக்­க­வில்லை. ஒரு மடத்தை கருங்­கல் கோயி­லாக கட்­டி­விட்டு, மடம் என்று பொய் சொல்லி அனு­மதி பெற்­றுள்­ள­னர். இத­னால் சிவாச்­சா­ரிய
சங்­கத்­தி­னர் பாரம் ­ப­ரிய சைவ ஆதீ­னங்­க­ளின் ஆத­ரவை நாடி­யுள்­ள­னர். தரு­மை­யா­தீ­னம், திரு­வா­வ­டு­துறை, திருப்­ப­னந்­தாள் காசி­ம­டம் போன்ற ஆதி­னங்­கள் சுந்­த­ர­மூர்த்தி சுவா­மி­கள் கோயி­லுக்கு தமிழ்­மு­றைப்­ப­படி கும்­பா­பி­ஷே­கம் நடத்த கூடாது என்­றும், அமா­வா­சை­யில் கும்­பா­பி­ஷே­கம் செய்­யக்­கூ­டாது என அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளது. மேலும் தை மாதத்­திற்கு பின் நல்ல நாளில் ஆகம மர­புப்­படி செய்ய வேண்­டும், என அறிக்கை வெளி­யிட்­டும் அவ்­வாறு நிகழ்த்­து­மாறு சிவாச்­சா­ரிய சங்­கத்­தி­னரை வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.ஆனால் எதை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், கும்­பா­பி­ஷே­கம் நடப்­ப­தற்­கான பணி­கள் மும்­மு­ர­மாக நடப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

Advertisement
 
Advertisement