Advertisement

‘வங்கபாரதி’ சார்பில் தீபாவளி: கடலில் காளி சிலை கரைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வசிக்கும் மேற்கு வங்கத்தினர், தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சியில், நரகாசூரனை வதம் செய்த காளி சிலையை கடலில் கரைத்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த ஏராளமானோர், புதுச்சேரியில் சின்னையாபுரம், வாழைக்குளம், வைத்திக்குப்பம் மற்றும் ஒயிட் டவுன் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் சங்கமான ‘வங்கபாரதி’ சார்பில், திருவள்ளுவர் நகரில் உள்ள சாய்பாபா திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, நரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐந்து அடி உயர காளி சிலையை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தனர். நேற்று பகல் 12.00 மணியளவில் திருமண மண்டபத்தில் இருந்து காளி சிலையை முன்று சக்கர வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று பழைய சாராய ஆலை பின்புறம் உள்ள கடலில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வங்கபாரதி தலைவர் சுப்ரதா, புதுச்சேரி காங்., சேவாதளம் ஒருங்கிணைப்பு செயலர் ரேகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement