Advertisement

திருச்செந்துாரில் 12 கால் மண்டபம் இடித்து விழுந்தது

துாத்துக்குடி: திருச்செந்துார் சன்னிதி தெருவில், 12 கால் மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடித்து விழுந்தது. அப்பகுதியில் மக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான நுழைவு வாயிலாக சன்னிதி தெரு உள்ளது. இதில், துாண்டுகை விநாயகர் கோவில் பின்புறம், சன்னிதி தெரு முகப்பில் செங்குந்தர், 12 கால் மண்டபம் உள்ளது.

செங்குந்தர் சமுதாயத்தினர் இதை பராமரிப்பு செய்வதால், இதை, செங்குந்தர், 12 கால் மண்டபம் என அழைப்பது உண்டு. மிகவும் பழமையான இந்த மண்டபம், தற்போது மழையால் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. திருச்செந்துாரில்,கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையில் செங்குந்தர், 12 கால் மண்டபத்தின் மேற்கூரை நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அப்பகுதியில் யாரும் இல்லாததால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும் சேதமடைந்த மண்டபத்தின் மேல் பகுதி, கீறல் விழுந்து நிலையில் எந்த நேரத்திலும் விழலாம் என்கிற நிலையில் உள்ளது. சஷ்டி நேரத்தில், பக்தர்களுக்குஆபத்து ஏற்படாத வண்ணம், அபாய கட்டத்தில் உள்ள மண்டபத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்’ என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
 
Advertisement