Advertisement

திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபத்துக்கு கொப்பரை ரெடி

திருச்சி: கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, தீபம் ஏற்றுவதற்காக, திருச்சி மலைக்கோட்டையில் செப்பு கொப்பரையில் திரி போட்டு தயார் செய்யப்படுகிறது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமானவசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு தீபத்திருவிழா, கடந்த, 11ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் துவங்கியது. வரும், 23ம் தேதி, தீபம் ஏற்றுவதற்காக, மலை உச்சியில் செப்பு கொப்பரை வைக்கப்பட்டு, பருத்தி நுாலில் தயாரிக்கப்பட்ட, 300 மீட்டர் நீளத்திரி, 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்த கலவையில் ஊறவைக்கப்பட்டுள்ளது. கொப்பரையில் வைக்கப்படும் திரி முழுமையாக எண்ணெய் கலவையில் ஊறிய பின், வரும், 23ம் தேதி மாலை, 6 மணிக்கு, கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்களுக்கு எரியும். இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement