Advertisement

சபரிமலையில் கூட்டம் அதிகரிப்பு: போலீஸ் கெடுபிடி குறைந்தது

சபரிமலை: சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரித்து வருகிறது. நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அப்பம் தயாரிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் சபரிமலை போராட்டக்களமானது. அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.பக்தர்கள் கூட்ட மாக பஜனை நடத்தவும், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தரிசனம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.இத்தகைய பிரச் னைகளால் இந்த ஆண்டு மண்டல சீசன் தொடக்கம் முதல் பக்தர்கள் கூட்டம் மிக குறைவாகஇருந்தது. வருமானம்மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. கெடுபிடி குறைந்ததுகேரள உயர்நீதிமன்றம் மூன்று கண்காணிப்புக்குழுவை நியமித்ததோடு, போலீ சாரை கடுமையாக விமர்சித்தது. இதனால் சன்னி தானத்தில் போலீசாரின் கெடுபிடி குறைந்துள்ளது.

லத்தி, கவசம் போன்றவற்றுடன் உள்ள போலீசாரை காண முடியவில்லை. இரவில் பஜனை நடத்து பவர்களை வளைத்து கைது செய்யவில்லை. தேவையில்லாமல் கூட்டமாக நின்று பரபரப்பு ஏற்படுத்தவில்லை. போராட்டக்காரர்களும் தங்கள் வேகத்தை குறைத்துள்ளனர். இதன் காரணமாக 5 நாட்களாக சபரிமலையில் கூட்டம் அதிகரித்து வருகிறது. வருமானம் அதிகரித்ததோடு, பிரசாத விற்பனையும் உயர்ந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப்பம் தயாரிப்பு நேற்று முன்தினம் இரவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மண்டல கால கூட்டத்தை காண முடிகிறது. சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு இன்று இரவுடன் முடிகிறது. இது நீட்டிக்கப்படுமா என்பது பற்றி தகவல்கள் இல்லை.

Advertisement
 
Advertisement