Advertisement

பண்ருட்டி அருகே 21 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம், கீழ்காவனூர் கிராமத்தில் உள்ள சுந்தர விநாயகர், அகிலநாராயண பெருமாள், பாண்டுரங்கன், திரவுபதியம்மன், அபிராமேஸ்வரர், துர்கையம்மன் உள்ளிட்ட 21கோவில்களுக்கு மகாகும்பாபிஷேகம் நேற்று (பிப்.,10ல்) காலை 8:30 மணியளவில் நடந்தது.

கடந்த 7ம் தேதி விநாயகர், அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று (பிப்., 10ல்) காலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், புண்யாவாசனம், கோபூஜை, 4ம் கால பூர்ணாகுதி யாத் ராதானம், கடம் புறப்பாடாகி காலை 7:10 மணிக்குமேல் 9:00 மணிக்குள் பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும், காலை 9:00 மணிக்குமேல்10:30 மணிக்குள் திரவுபதியம்மன் கோவிலுக்கும், 10:00 மணிக்கு விமானம், மூலவர் பெருமாளுக்கு மகாசம்ப்ரோஷணம் நடந்தது.

விழாவில் அமைச்சர் சம்பத், அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கந்தன், தொரப்பாடி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கனகராஜ் மற்றும் ஆயிரக் கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement