Advertisement

ஏப். 19 ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்., 19 ல் நடக்கிறது. இதற்காக ஏப்.,17 ல் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுகிறார்.

ஏப்.,18 ல் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. ஏப்.,19 ல் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். அன்று ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவு வண்டியூர் செல்லும் பெருமாள், ஏப்., 20 மதியம் தேனுார் மண்டபத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும், ஏப்., 21 தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்.,22 ல் கள்ளழகர் அழகர்கோவிலுக்கு புறப்பட்டு மறுநாள் கோயிலுக்கு செல்கிறார்.

Advertisement
 
Advertisement