Advertisement

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தேர் திருவிழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர தேர் திருவிழா, நேற்று, விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுந்தனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் பிரதான உற்சவமான தேர் திருவிழா, நேற்று, விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக, நேற்று, காலை, 7:00 மணிக்கு, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி திருத்தேரில் எழுந்தருளினர். 9:31 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் பத்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தொண்மையான பழைய உற்சவர், இந்த ஆண்டு வீதியுலா நடைபெறுவதை, ஏகாம்பரநாதர் பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதியம், 1:45 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது.அதே போல், சுவாமியை தேருக்கு கொண்டு செல்ல நிலையான படி வசதிகள் கிடையாது. பல ஆண்டுகளாக கட்டை கட்டி அதன்மேல் சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டாவது, இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம் செய்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
 
Advertisement