Advertisement

பங்குனி உத்திரத்தில் தெய்வத்தின் திருமணங்கள்!

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும் படியான வரத்தைப் பெற்றார். சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையை மணந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது இன்றைய தினமே.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்நாளே காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ஜுனன் பிறந்ததும் இந்நாளில்தான். சுவாமி ஐயப்பனின் அவதாரத் திருநாளும் பங்குனி உத்திரத் திருநாளே. இந் நன்னாளில்தான் காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றார். இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

Advertisement
 
Advertisement