Advertisement

திருத்தணி மழை வேண்டி வழிபாடு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில், நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு மழை பெய்ய வேண்டும் என, 100 பெண்கள் ஏரியில், பொங்கல் வைத்து வழிபட்டனர்.

திருத்தணி நகராட்சியில், கடந்தாண்டு பருவ மழை இல்லாததால், குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் ஏரிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.இதனால், நகராட்சியில் கடும் குடிநீர் பிரச்னைஉள்ளது.குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், மழை பெய்ய வேண்டியும் திருத்தணி சந்து தெரு, பெரிய தெரு, மேட்டு தெரு, மற்றும் ஆறுமுகசுவாமி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து, 100 பெண்கள் பழைய தர்மராஜா கோவில் அருகில் உள்ள ஏரியில், பொங்கல் வைத்துவழிபட்டனர்.அப்போது, மழை பெய்ய வேண்டும் என, சிறப்பு பூஜைகள் செய்து, வருண பகவானைவேண்டினர்.

Advertisement
 
Advertisement