Advertisement

பொன்னேரி குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பொன்னேரி: குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, இலுப்பாக்கம் கிராமம் அருகே உள்ள குமரஞ்சேரியில், குமாரசுவாமி கோவில் உள்ளது. இது, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகும். கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று (மார்ச்., 24ல்), மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று (மார்ச்., 24ல்), காலை, 11:30 மணிக்கு, குமாரசுவாமி கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் முருக பெருமானை நெஞ்சுருக வேண்டினார். பின், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன.

வெகு விமரிசையக நடந்த கும்பாபிஷேக விழாவில், பொன்னேரி, பனப்பாக்கம், இலுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் திரளாக பங்கேற்று, முருக பெருமானை வழிபட்டு சென்றனர்.

Advertisement
 
Advertisement