Advertisement

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்:விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் நேற்று (ஏப்., 17ல்)நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் நேருஜி ரோடு, கே.கே ரோடு சிக்னல், நான்குமுனை சந்திப்பில் உள்ள வீரவாழிய ம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம், சித்ரா பவுர்ணமி விழா, கடந்த 15ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் 16ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைநடந்தது.நேற்று 17ல் காலை 6.00 மணிக்கு, மங்கள இசையுடன், 4ம் கால யாக பூஜை, அம்மன் மற்றும் பரிவாரங்களுக்கு ரக்ஷாபந்தனம், தத்வார்ச்சனை, காலை 9.00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது.காலை 9.15 மணிக்கு தீபாராதனையும், 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு முடிந்து, 10.00 மணிக்கு விமானம், பரிவார தெய்வங்களுக்கும், 10.15 மணிக்கு மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, மஹா அபிஷேகம், 10.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.விழாவில் விழுப்புரம் 17வது வார்டு முன்னாள் கவுன்சிலர் வெங்கடபதி, நாராயணன் மருத்துவமனை டாக்டர் நாராயணன், டாக்டர் முரளிதரன், கோவில் பரம்பறை அறங்காவலர் வேலவன், தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் குமரவேல், பாதுஷா வீதி காய்கறிகடை
சங்கர், நியூ செல்வம் மொபைல்ஸ் உரிமையாளர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement