Advertisement

சித்ரகுப்தர் கோவில் விழா: பக்தர்கள் வழிபாடு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில், 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.தமிழகத்தில், காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக, திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் சித்ரகுப்தருக்கு கோவில் உள்ளது. ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபாடு நடத்துகின்றனர்.சித்ரகுப்தர் கோவிலில், 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம், மாலை, மங்கள இசையுடன் சித்ரகுப்தர் உற்சவர் திருவீதியுலா, பால்குடம் ஊர்வலம், அபிஷேக பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சித்ரகுப்தர் பூஜை, யாகபூஜையும், 16 வகையான திரவியங்களால், அபிஷேகமும், சிறப்பு அபிஷேக பூஜையும் நடந்தது.கூனம்பட்டி ஆதீனம், நடராஜ சுவாமி, சித்ரா பவுர்ணமி விழாவின் மகிமை குறித்து பேசினார்.காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், நீண்ட வரிசையில் சென்று, சித்ரகுப்தரை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement