Advertisement

விக்கிரவாண்டி பனையபுரத்தில் தேர் திருவிழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவிலில் சித்திரை பெருவிழாவை யொட்டி, தேர் திருவிழா நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் வரலாற்று புகழ்மிக்க மெய்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரன் கோவிலில் சித்திரை பெரு விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான நேற்று (மே., 17ல்)தேர் திருவிழா நடந்தது.அதனையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு பனங்காட்டீஸ்வரன், மெய்யாம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, விநாயகர், முருகர், மெய்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரன் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து காலை 8:15 மணிக்கு பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் செல்வராசு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement