Advertisement

சேலம் இஸ்கானில் நரசிம்ம சதுர்தசி விழா

சேலம்: சேலம் அடுத்த, கருப்பூர் இஸ்கான் கோவிலில், நரசிம்ம சதுர்தசி விழா, இன்று (மே., 18ல்) கொண்டாடப்படுகிறது. நரசிம்மர் அவதரித்த திருநாளை, கிருஷ்ண பக்தி இயக்கம், உலகம் முழுதும் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. சேலத்தில், மாலை, 6:30 மணிக்கு, பஜனையுடன் விழா தொடங்குகிறது. 7:00 மணிக்கு அபிஷேகம், 7:15 மணிக்கு, நரசிம்ம கதா, 8:15
மணிக்கு, நரசிம்ம நாடகம், 9:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, இஸ்கான் சீனிவாச கிருஷ்ணதாஸ் செய்து வருகிறார்.

Advertisement
 
Advertisement