Advertisement

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா

முதல்வர் நாராயணசாமி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 9ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய உற்சவமான தேர் திருவிழா நேற்று 17ல், காலை நடந்தது. முதல்வர் நாராயணசாமி, முதல்வரின் பார்லிமென்ட் செயலர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., ஆகியோர்
வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை வந்தடைந்தது.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி மணவாளன், நிர்வாக அதிகாரி ராஜசேகரன், அர்ச்சகர்கள் குருமூர்த்தி குருக்கள், விவேகானந்த குருக்கள், சந்திரமோகன் குருக்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement