Advertisement

ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள அரசாளவந்த அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் தற்போது புதிப்பிக்கப்பட்டு ஜூன் 14 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று (ஜூன்., 11ல்) காலை 7:45 மணிக்கு எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் இந்து சமய மன்ற விழா குழுவினரும், பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று(ஜூன் 12) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், ஜூன் 13 ல் நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.ஜூன் 14 ல் காலை 6:30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜையுடன் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 10:10 மணிக்கு ஸ்ரீ அரசாளவந்த அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய மன்ற குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement