Advertisement

பாலமேட்டில் பொங்கல் திருவிழா

அலங்காநல்லுார்: பாலமேடு முத்தாலம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது. முதல் நாள் பாரம்பரிய வழக்கப்படி பூஜாரி வீட்டிலிருந்து- மறவப்பட்டிக்கு சென்று மேளதாளம் முழங்க அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கண்திறந்து சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பின் பொங்கல் வைத்து சக்தி கிடாய்வெட்டி, பால்குடம், அக்கினிசட்டி உட்பட பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்தினர். அன்றிரவு முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சன்னதி அருகே பெண்கள் குலவையிட்டு பாடினர். மறுநாள் பூப்பல்லக்கில் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் உற்ஸவம் நடந்தது.

Advertisement
 
Advertisement