Advertisement

எண்ணாயிரத்தில் திருப்பணி சிறப்பு பூஜை

விக்கிரவாண்டி: எண்ணாயிரம் முற்றிலா முலையம்மன் உடனுறை திருக்கடம்பலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணி சிறப்பு பூஜை நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த எண்ணாயிரம் கிராமத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வம்ச மன்னர்களான விஜயாலயன், ஆதித்தன், பராந்தகன், ராஜராஜசோழன் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் சேதமடைந்திருந்தது. தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை பவுர்ணமி தினத்தில் திருப்பணி விரைந்து நடைபெற சிறப்பு பூஜை நடந்தது.பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு திருக்கடம்ப லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, சந்தனம் மற்றும் மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.அபிஷேகம் மற்றும் பூஜைகளை சிவனடியார் அம்மையப்பன் செய்திருந்தார். பூஜையில் திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement