Advertisement

மதுரை அமைதியாக வாழ வழிகாட்டும் கீதை சுவாமி சிவயோகானந்தா பேச்சு

மதுரை: விளாச்சேரி ஐயப்பன் கோயிலில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தாவின் பகவத் கீதை சொற்பொழிவை கோயில் தலைவர் ராகவ வாரியார் துவக்கி வைத்தார்.

சிவயோகானந்தா பேசியதாவது: கீதை மனித தர்மத்தை கூறுவதால் தான் அதன் முதல் சுலோகம் தர்மம் என்ற வார்தையுடன் துவங்குகிறது. நாம் மெய்ப் பொருளாகிய உண்மையை உணர வேண்டும். ஆற்ற வேண்டிய பணிகளை அறம் தவறாது, விருப்பு, வெறுப்பின்றி செய்ய வேண்டும்.

மகாபாரதத்தில் திருதிராஷ்டிரன் தன் மகன்கள், பதவியின் மீது கொண்ட பற்றினால் நடுநிலை தவறி பாண்டவர்களுக்குரிய பங்கு தர மறுத்தான். நன்மை, தீமைகளைப் பிரித்து அறியாததால் அவன் கண்களோடு மனமும் குருடானது. இது தான் பாரதப்போர் ஏற்பட காரணமாக இருந்தது.

நம் அறிவை அறியாமை இருள் சூழும் போது நம்மை நாமே எப்படி அழிக்கிறோம் என்பதையும், அதில் இருந்து மீண்டு அமைதியாக வாழும் வழிகளையும் கீதை விளக்குகிறது, என்றார். சொற்பொழிவு ஜூன் 23 வரை மாலை 6:30 மணி - இரவு 8:00 மணி வரை நடக்கிறது.

Advertisement
 
Advertisement