Advertisement

நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

ஆலந்துார்:நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷே கம், காஞ்சி சங்கராச்சாரியார் முன்னிலையில், நேற்று (ஜூலை., 15ல்) விமரிசையாக நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நங்கநல்லுார், இரண்டாவது பிரதான சாலையில் அமைந்துள்ள, வரசித்தி விநாயகர் கோவிலில், 2015ல், வெள்ளநீர் புகுந்து, கட்டடங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது, திருப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மஹா கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை., 15ல்) விமரிசையாக நடந்தது.

இதை முன்னிட்டு, 12ம் தேதி, யாகசாலை துவக்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, கணபதி, ஸ்ரீசுக்த, ஆவஹந்தி, நவக்கிரஹ ஹோமங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று (ஜூலை., 15ல்), காலை, 5:30 மணி முதல், ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

பின், ஜபம், ஹோமம், வேதபாராயணம், மஹா பூர் ணாஹுதி, யாத்ரா தானம் நடந்தன.காலை, 8:30 மணிக்கு, கடப்புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, விமான கலசங்களுக்கு, கும்ப நீர் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.இந்த வைபவம், காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந் திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கும்பகோணம், தினகர சர்மா தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை தரிசித்தனர். அவர்களுக்கு, புனித நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று (ஜூலை., 15ல்) மாலை, 3:30 மணிக்கு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இரவு, உற்சவ மூர்த்திகளின் திருவீதி புறப்பாடும் நடந்தது. இன்று (ஜூலை., 16ல்) முதல், ஆக., 29ம் தேதி வரை, மண்டலாபிஷேகம் நடக்கிறது.

Advertisement
 
Advertisement