Advertisement

திருப்போரூர் தையூர் மாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

திருப்போரூர்:தையூர், அறம் வளர்த்தநாயகி சமேத மாரீஸ்வரர் கோவிலில், ராஜகோபுர கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை., 15ல்), கோலாகலமாக நடைபெற்றது.

திருப்போரூர் ஒன்றிம், கேளம்பாக்கம் அடுத்த தையூரில், அறம் வளர்த்த நாயகி சமேத மாரீஸ்வரர் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க, திருப்பணி குழுவினர் மற்றும் தையூர் கிராமத்தினர் முடிவு செய்தனர்.

திருப்பணி செயலரும், கோவில் அர்ச்சகருமான குருநாதன் தலைமையிலான குழுவினர்கள் ஏற்பாட்டில், ராஜகோபுரம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

இதையடுத்து, ஐந்து நிலை ராஜகோபுரத்தின் குப்பாபிஷேகம், நேற்று (ஜூலை., 15ல்) காலை, 9:30 மணிக்கு, கோலாகலமாக நடைபெற்றது.தொடர்ந்து, மூலவர், விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதி உலா வைபவமும் விமரிசையாக நடைபெற்றது.

ராஜகோபுர திறப்பு மற்றும் கும்பாபிஷேக வைபவத்தை, திருவண்ணாமலை, துறையூர் திரு முதுகுன்றம் வீரசைவ ஆதினம், 24ம் பட்டம், ஸ்ரீலஸ்ரீ ரத்ன வேலாயுதா சிவப்பிரகாச பரமாச் சார்ய சுவாமிகள் நடத்தினார்.

Advertisement
 
Advertisement