Advertisement

பிறந்தது ஆடி: கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதம், இன்று பிறந்ததை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள், கொடியேற்றத்துடன் துவங்குகின்றன.

பக்தர்கள், பொங்கல் வைத்து, கூழ் வார்த்து, பால்குடம் ஏந்தி, உடலில் அலகு குத்தி, அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவர். இந்த மாதத்தில், வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தி பூர்வமான இந்த செயல்களுக்கு, அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. ஆடி, மழைக்காலத்தின் துவக்கம். தொற்று நோய்கள் பல, இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும், சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோவில்களில், பிரசாதமாக இவை தரப்படுவதால், நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில், எளிதில் செரிக்கக் கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது.இன்று, ஆடி மாதம் பிறப்பதை முன்னிட்டு, அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
 
Advertisement