Advertisement

கூத்தாட்டுகுளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்

கோட்டயம், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பத்ரகாளி கோயிலில் நோய் தீர்க்கும் மருந்தை பிரசாதமாக வழங்கும் ஒரு மாத நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ. எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ. துாரத்தில் உள்ளது ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் நெல்லிக்காட்டுமனாவில் உள்ளது பத்ரகாளி கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு நிவேத்தியம் செய்த மருந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழங்கால சுவடிகளில் குறிப்பிட்டவாறு பல்வேறு மூலிகைகள் கலந்து ஆயுர்வேத சாஸ்திரப்படி இந்த மருந்து தயார் செய்யப்படுகிறது. வேதவிற்பன்னர்கள் முன்னிலையில் மந்திரங்கள் ஓதி அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் பல்வேறு நோய்களை தீர்க்கும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நேற்று காலையில் துவங்கியது. ஆகஸ்ட் 16 வரை தினமும் காலை 6:00 முதல் 11:00 மணி வரையும் மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரையும் மருந்து பிரசாதம் வழங்கப்படும்.விழாவை முன்னிட்டு 25 யானைகள் கலந்து கொள்ளும் கஜபூஜை ஜூலை 21ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் பொங்கலிடும் மருந்து பொங்கல் நிகழ்ச்சி ஜூலை27 ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.மேலும் அறிய 94476 14800ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Advertisement