Advertisement

ஆடிக்காற்றால் பழநி ரோப்கார் நிறுத்த முடிவு

பழநி, பழநி முருகன் கோயில் ரோப்கார் பலத்த காற்றின் போது பாதிக்கப்படுகிறது. ஆடிக்காற்று துவங்கிய நிலையில், ரோப்காரை ஒருமாதம் நிறுத்தி, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலம் மூன்று நிமிடங்களில் எளிதாக பக்தர்கள் செல்கின்றனர். பலத்த காற்று, மழையின் போது பாதுகாப்பு கருதி ரோப்கார் இயக்கம் நிறுத்தப்படுகிறது. தற்போது பலத்த காற்று வீசுவதால், தினமும் சேவை பாதிக்கப்படுகிறது. ஆடியில் மேலும் கற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், ரோப்கார் இயக்கத்தை நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரோப்கார் மாதத்தில் ஒருநாளும், ஆண்டுக்கு ஒருமாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடக்கிறது.இந்தாண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 3ம் வாரத்தில் இருந்து 40 நாட்கள் வரை நிறுத்த உள்ளோம். கம்பிவடம், உருளைகளை ஆய்வு செய்து தேய்மான பாகங்கள் மாற்றப்படும், பெட்டிகள் புதுப்பிக்கப்பட உள்ளன என்றார்.

Advertisement
 
Advertisement