Advertisement

கம்பத்தில் நால்வர் குருபூஜை விழா

கம்பம் : கம்பத்தில் சில ஆண்டாக திருவாவடுதுறை ஆதினபன்னிரு திருமுறை மற்றும் சைவ சித்தாந்த நேர்முக பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மையங்கள் சார்பில் சமயக்குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி மற்றும் மாணிக்க வாசகர் ஆகிய நால்வர் குருபூஜை விழா நடத்தப்பட்டது.

இதையொட்டி நேற்று முன்தினம் 18ம் தேதி காலை கம்பராயப்பெருமாள் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனி வந்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, உழவர் சந்தை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது. பின்னர் குருபூஜை விழா சொற்பொழிவு நடைபெற்றது.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜம் இறைவணக்கத்துடன் துவங்கிய சொற்பொழிவிற்கு திருவாவடுதுறை ஆதீன பன்னிரு திருமுறை நேர்முக பயிற்சி மையங்களின் இயக்குநர் சபா சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மதுரை சசிகலா ஞானாபிஷேகம் முன்னிலை வகித்தார். ஓய்வு பேராசிரியர் ராமநாதன் வரவேற்றார். அமைப்பாளர் கம்பராயர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

திருமந்திரத்தில் சிவநெறி என்ற தலைப்பில் பரஞ்சோதி முத்து, திருவாசகத்தேன் என்ற தலைப்பில் ஆறுமுகம், உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில் பேராசிரியை தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர். அன்னதானம் நடைபெற்றது.

Advertisement
 
Advertisement