Advertisement

பிரம்ம தீர்த்தத்தில் குவியும் நாணயங்கள்

காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த, கிணற்றில் ரூபாய் நோட்டுகள், காசுகள் குவியல் குவியலாக கிடக்கிறது. பக்தர்கள் கிணற்றில் நாணயத்தையோ ரொக்கத்தையோ போட வேண்டாம் என அறநிலையத்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காரமடை ரங்கநாதர் கோவில் தல வரலாற்றுச் சான்றாக நான்கு யுகங்களை கண்ட பிரம்மதீர்த்தம் கோவிலின், மேற்குப் பகுதியில் கிணறு உள்ளது.

இக்கிணற்றிலிருந்து, மாசி மாத பிரம்மோற்சவ காலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு தீர்த்த வாரி உற்சவம் நடக்கிறது. சிறப்பு வாய்ந்த பிரம்ம தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக, ரூபாய் நோட்டுகள், காசுகளை சமர்பித்துச் செல்கின்றனர். இதில் போடப்படும் ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைந்து, கிழிந்து, செல்லாக்காசுகளாக மாறிவிடுகின்றன.சில நேரங்களில், காசுகள் குவியலாக ஆழமான பகுதிக்கு செல்வதாலும், அறநிலையத்துறையினர் காணிக்கைகளை கணக்கில் கொள்ள சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியனிடம் கேட்டபோது பக்தர்கள் காணிக்கைகளை கிணற்றில் போட வேண்டாம் உண்டியலில் செலுத்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை, பொருட்படுத்தாமல் கிணற்றில் செலுத்துகின்றனர். மேலும் அடுத்த முறை கோவில் உண்டியல் திறந்து, எண்ணும் போது கிணற்றிலிருந்தும் எடுத்து என்னப்படும் என்றார்.

Advertisement
 
Advertisement