Advertisement

பெரியகுளத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வணிகவைசியர் சங்கத்தில் சுந்தரேசப்பெருமாள் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்திச் சங்கத்தினரால் பிட்டு உற்ஸவ விழா நடந்தது. முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளான சுந்தரேசப் பெருமாள், மீனாட்சியம்மன், விநாயகர், பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் ரிஷப வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, மேளதாளத்துடன் சங்கத்திற்கு அழைத்து வந்தனர்.

பெரியகுளம் வணிகவைசியகுல அபிவிருத்திச் சங்கத்தில் நடந்த பிட்டு உற்ஸவத்தில் ரிஷபவாகனத்தில் சுந்தரேசப்பெருமாளுடன் மீனாட்சியம்மன் சோமசுந்தரக் கடவுள், வந்தி என்னும் பக்தைக்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சஸத்தை அர்ச்சகர்கள் குழுவினர் செய்து காண்பித்தனர். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.10, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலர் வேல்முருகன், பொருளாளர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement
 
Advertisement