Advertisement

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 216 வது உழவாரப்பணி

காஞ்சிபுரம்: தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது.

இம்மன்றம் வருகிற 22.9.2019, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் பகுதி மக்களிடையே திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, அடியார்கள் புடைசூழ. திருக்கோயில்களின் தூய்மை -நலன் - பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருவீதிவுலா வருவதுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகளையும் நடுகிறது.
இதை தொடர்ந்து இந்த இறைபணிமன்றம் காலை 10 மணியளவில் குன்றத்துார் சேக்கிழார் அவதாரத்தலம் அருகில் உள்ள பாலவராயன் திருக்குளம், மற்றும் திருநாகேஸ்வரர் திருக்கோயில், திருக்குளத்தில் தனது 216வது உழவாரப்பணியை செய்கிறது.

விழிப்புணர்வின் அவசியங்கள்

* திருக்கோயில்தோறும் தூய்மையாக வைத்திருத்தல் (உழவாரப்பணி)
* திருக்கோயில்களை நமது இல்லமாக பாவித்து தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
* திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், திருக்கோயில் வளர்ச்சி, வருமானம் மூலமாக, பின்வரும் தேவைகளுக்கு வழி செய்தல்.
* திருக்குளம் பராமரிப்பு - திருக்குளத்தை சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வள ஆதாரத்தை பெருக்குதல்
* திருக்கோயில்களில் சிலை திருட்டை தடுப்பதற்கான வழியை உருவாக்குதல்.
* திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதியுலா செல்ல ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் சுவாமி திருத்தேர் செய்து பவனி வர ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் கோசாலை பாதுகாத்து தொடர்ந்து பராமரித்தல்.
* திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், தங்குமிடம், அன்னதான கூடம், கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு
* திருக்கோயில்தோறும் அப்பகுதிவாழ் சிறார்களுக்கு அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு,
* திருக்கோயில்தோறும் ஆகம விதி பின்பற்றுதல், புராதானம் மாறாமல் காப்பது.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் வலியுணர்த்தும் வகையில் அவர்களாகவே முன்வந்து திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதே மன்ற அடியார்களின் தலையாய கடமையாகும்.

தொடர்புக்கு:
எஸ். கணேசன் 9840 123 866
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்

Advertisement
 
Advertisement