Advertisement

வராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில், 19ம் ஆண்டு நவராத்திரி உற்ஸவ விழா வருகிற செப்., 29 (ஞாயிறு) காலை 10:30 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் துவங்கி அக்., 8 (செவ்வாய்) வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

நாள்தோறும் காலை 9:00மாலை 4:00 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பாராயணம், நாமாவளி, சக்தி ஸ்தோத்திரம் தினமும் மாலை 6:00 மணிக்கு வீதியுலாவும் நடக்கும். 10 நாட்களுக்கும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர், உற்ஸவர் வராகி அம்மன் கொலுவுடன் வீற்றிருப்பார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், கோயில் ஸ்தானிக பூஜகர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement