Advertisement

நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி இறுதி நாளை முன்னிட்டு வண்ணம் மரத்தில் மீது அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தினத்திலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரியின் இறுதி நாளான நேற்று முன்தினம் வண்ணி மரத்தின் மீது அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நித்திய கல்யாண பெருமாள் கோவிலிருந்து பெருமாள் குதிரை வாகனத்திலும். கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகப்பெருமான் பார்வதி அம்மனின் அருள் பெற்று வேலுடன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா நடந்தது.பின் அம்மையார் குளக்கரையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று. அம்பு எய்தும் நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement